1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும் ஸ்ரீ லங்கா

பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே அதனை எதிர்க்க முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“இந்த பட்ஜெட்டில் எந்தத் தவறும் இல்லை. ஒவ்வொரு துறைக்கும் சில ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றைப் பார்த்தால், எத்தனையோ பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் எத்தனை முன்மொழிவுகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதுதான் இங்கு முக்கியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆண்டின் இறுதியில் இவை எந்தளவுக்குச் செயல்படுத்தப்படும் என்பது முக்கியம். நான் 2002இல் நிலம் தொடர்பான திட்டத்தை கொண்டு வந்தேன். இதையே 2015இல் எம்.பி கயந்த கொண்டு வந்தார்.

“இதில் பல விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாத விடயங்களாகும். இதனை மொட்டுக் கட்சியினர் மட்டுமே எதிர்க்க முடியும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி