1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச கிரிக்கெட் சபையினால் இலங்கையின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தீர்மானிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

தலைமையில் அமைச்சு உபகுழுவொன்று ஜகனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கிரிக்கெட் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்தது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறி தலைமையிலான குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பல போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை தொடர்ந்து பெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி