1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியாவில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று உலக சம்பியனாகியது.

இந்தியாவில் நடைபெற்று வந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா – அவுஸ்திரலிய அணிகள் மோதின.

இந்தத் தொடரில் இதுவரை எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியடையாத இந்திய அணி சம்பியன் கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

எனினும், அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு நெருக்குதல் கொடுத்து கிண்ணத்தை அசால்டாகத் தூக்கிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் எழாமல் இல்லை.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 30 ஓட்டங்களைச் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து அதிர்ச்சியளித்தது.

நான்கு ஓட்டங்களைச் சேர்த்திருந்தபோது சுப்மன் ஹில் ஆட்டமிழந்து சென்றார். அவருக்கு அடுத்ததாக வந்த கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில் மறுமுனையில் நின்ற அணித்தலைவர் ரோஹித் சர்மா 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.

அப்போது இந்திய அணி 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோஹ்லி அரைச்சதம் அடித்த கையோடு, 54 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரவீந்திர ஜடேயா 9 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் 66 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து மொஹமட் சமி 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்ட, பும்ரா ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் தாக்குப் பிடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் 18 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து யாதவ் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைச் சேர்த்தது. மொஹமட் சிராஜ் 9 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.

அவுஸ்திரேலியா சார்பாக பந்து வீச்சில், மிச்சல் ஸ்ராக் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ், கம்மின்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் சாய்க்க, எஞ்சிய விக்கெட்டுகளை, மக்ஸ்வெல், சம்பா ஆகியோர் தலா ஒன்றுப்படி சாய்த்தனர்.

பின்னர், 241 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு, ஆரம்பம் பேரதிர்ச்சியாக அமைந்தது. டேவிட் வோர்னர் (7), மிச்செல் மார்ஷ் (15), ஸ்ரீபன் ஸ்மித் (4) ஆகியோர், அணி 50 ஓட்டங்களைக்கூடத் தொடாத நிலையில் 'பெவிலியன்' திரும்பினர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹெட்டுடன், மார்னஸ் ஜோடி சேர்ந்து பொறுமை காத்தார். இந்த ஜோடி மெது மெதுவாக நகர்ந்து இறுதியில் வெற்றியிலக்கை நெருங்கிய நிலையில், சதம் கடந்து அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஹெட் 137 ஓட்டங்களைச் சேர்த்துச் சென்றார்.

இவர் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியா, 42.5 ஓவர்களில் 239 ஓட்டங்களைச் சேர்த்த்திருந்தது, மேலும் இரண்டு ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் மக்ஸ்வெல் களத்துள் நுழைந்த வேகத்திலேயே இரு ஓட்டங்களை அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.

இதன்படி அவுஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்களைச் சேர்த்ததன் மூலம் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, ஆறாவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அந்த அணி சார்பாக நிதானமாக ஆடிய மார்னஸ் 58 ஓட்டங்களுடனும், மக்ஸ்வெல் இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் நின்றனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், சமி, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியாவின் ஹெட் தெரிவானார். தொடர் நாயகனாக இந்தியாவின் விராட் கோஹ்லி தெரிவானார்.

cwc_1.webpcwc_2.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி