1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மூன்று தேர்தல்கள் நடைபெறுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்றன அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றை நடத்த குறித்த நிதி தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டு்ள்ளார்.

எனினும், இந்த ஆண்டில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு மாதங்கள் உள்ள காலப்பகுதியில், இந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டரை வருடங்களை கடந்ததை தொடர்ந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாமென அவர் கூறியுள்ளார்.

இதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருப்பதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்றன அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் வாய் திறக்கவில்லை.

எனினும், 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று முன்னர் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று ஜனாதிபதியும் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. இதேவேளை, எந்தத் தேர்தல் நடந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இருக்கும் என்று பிரதமர் தினேஷ் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி