1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“காலி முகத்திடம் போராட்டத்தின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது

வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்கிறார்கள்” என்று,  ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர்.

“இதுபோலவே எதிர்க்கட்சிகளும் செயற்படுகின்றன. இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் மட்டுமே” என்று குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி