1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய

இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளை மீளக் கையளிக்காமல், தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக சில சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான இந்த இரண்டு வாகனங்களும், அரசாங்கத்தினால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விரு வாகனங்களும் கையளிக்கப்படாமை தொடர்பில் சுற்றாடல் அமைச்சு மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார். ஆனால் இதுவரை அந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் கடமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிஏயூ-4118, சிஏஎஸ்-9010 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு வாகனங்களை, 08.11.2023 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்தார்.

இதன்படி ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட CAU-4118 மற்றும் CAS-9010 இலக்கம் கொண்ட ஜீப் வண்டிகள், ஜனாதிபதி அலுவலகத்தின் அத்தியாவசிய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி