1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது கடமையை புறக்கணித்த அதிகாரிகளுக்கு அடைக்கலம் வழங்குவது தவறானது என,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்று (30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது அரசாங்கத்தின் கீழ் கடமைகளை புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (30) நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நீதிக்கான போராட்டம் ஓயாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

9/11 ஆணைக்குழுவிற்கு நிகரான ஆணைக்குழுவொன்றை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் யோசனை தெரிவித்த போதிலும் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி கூட பல தடவைகள் விசாரணைகள் நடத்தப்படும் என கூறியும் எதுவும் நடக்கவில்லை எனவும் இந்த உண்மையை யாரோ மறைப்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மன்னிப்பு கேட்கக்கூடாது எனவும் அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

“இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்தவர்களுக்கும், அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடமையை புறக்கணித்தவர்களுக்கும் பாதுகாப்போ ஆதரவோ இல்லை என்றும், கத்தோலிக்க மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் பல துன்பங்களை அனுபவித்தோம், நாட்டில் இந்த பயங்கரவாதத்திற்கு இடமில்லை.

“ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலை கண்டறியப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தி தனது  போராட்டத்தில் தொடர்ந்தும் இருக்கும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சரை பதவி மாற்றி வைத்திருக்கும் அரசாங்கத்தின் மோசடியை அம்பலப்படுத்திய விளையாட்டு அமைச்சரை பதவி நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.

"முன்னாள் சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரிவாக விவாதிக்கப்பட்ட பொது அவர் மீதான மோசடிகள் பேசப்பட்டது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினை இறக்குமதி செய்தமை, புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ரிடோக்சினன் தடுப்பூசியில் இருந்து 11 கோடி ரூபாய் திருடப்பட்டது போன்ற மோசடிகள் வெளிக்கொணரப்பட்டது.

“ களவு,மோசடிகளில் ஈடுபட்ட சுகாதார அமைச்சின் அப்போதைய அமைச்சரை பாதுகாப்பதற்காக அவரிற்கு வேறு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது, ஆனால் அந்தத் திருட்டுகளை வெளிக்கொணர்ந்த ரொஷான் ரணசிங்கவை பதவியிலிருந்து விலக்கி நியாயமற்ற செயல் இடம்பெற்றுள்ளதாக" அவர் தெரிவித்தார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி