1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டு விண்ணப்பங்கள் டிசம்பர்

மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகளினதும் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ் குறித்த அதிபர்களுக்கும், மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு இன்று (01) முதல் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது. 3,568 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி