1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த 29ம் திகதி  நடந்த பயங்கரவாத தாக்குதலில் பிரான்சின் தெற்கு கடற்கரை நகரமான நீஸின் நோத்ர்-டாம் தேவாலயத்திற்குள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கியின் இஸ்மிர் நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன. ஏராளமான உயிரிழப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம்.

கடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்டனர். படகு சென்று கொண்டு இருக்கும் போது திடீர் என தீப்பிடித்து செனகலின் வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் மூழ்கியது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்பு மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் உத்தரவிற்கு முரணாக செயற்பட்டமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இனவாத கருத்துக்களை வெளியிட்டதோடு, வைத்திய அதிகாரிகள் குழுவின் தலைவர் உள்ளிட்ட  அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தொற்று நோய்களை கட்டுப்படுத்துவற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமைத் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் பணி இராணுவத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையால், சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தலும் இராணுவத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் நாளை (29) தொடக்கம் பஸ் போக்குவரத்தை வரையறுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி