1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக

Feature

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நேற்று (04) இரவு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக

Feature

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து

Feature

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரும் பணக்காரரான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். குறிப்பாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரம் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.

ஆனால் தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கில் காட்டப்பட்டது.

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் ஆகும். எனவே டிரம்ப் விசாரணை நடந்து வந்த நிலையில் அண்மையில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதை தொடர்ந்து டிரம்ப் கைது நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை. டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Feature

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது இன்று (04) நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களின் மீதான பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் இறுதிப்படுத்தல் மற்றும் வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையினைப் பிரதிபலிக்கின்ற உயர்வடைந்த சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய நகர்வு என்பவற்றினைத் தொடர்ந்து சந்தை மனோபாவங்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பணவீக்க வீழச்சிப்பாதைச் செய்முறையின் தொடர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாவிருப்பதனை நிச்சயப்படுத்தும் பொருட்டு தற்போதுள்ள இறுக்கமான நாணயக் கொள்கை நிலையின் பேணுகை அத்தியாவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது.

Feature

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க

Feature

நாட்டின் சீனி நுகர்வில் கிட்டத்தட்ட 10% பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளால் உள்நாட்டிலேயே உற்பத்தி

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி