1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விமானப் படையின் ஆளில்லா விமானம் (Air Force Drone) தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. 

மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் காலி முகத்திடல் கோட்டாகோகம அறிவழி போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மன்றுக்கு அறிவித்துள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒன்றிணையுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பகிரங்க அழைப்பு விடுத்தார். 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

னாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி