1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரத்கம பிரதேசத்தில் திருடப்பட்ட

11 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை பேஸ்புக் ஊடாக விளம்பரப்படுத்தி 1,75,000 ரூபாவுக்கு விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருடப்பட்ட ஆட்டோவைக் கொள்வனவு செய்தார் என்ற  குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையின் ராஜகிரிய முகாமின் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
கடந்த 16ஆம் திகதி ரத்கம காலி வீதியில் கம்மத்தகொட பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிளை நேற்று (17) முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளிடம் விசாரணை நடத்தியபோது, ​​இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பின்பற்றி 1,75,000 ரூபாவுக்கு ஆட்டோவை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி