1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வரி கட்டாதவர்களிடமும் கட்டக்கூடியவர்களிடமும் அரசு

வரி வசூலிக்க வேண்டும், அரசு செய்ய முடியாமல் போனால், ஆறு மாதங்கள் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் செய்வோம் என ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

பலம் வாய்ந்த அமைச்சர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் அரச வங்கிகளில் 65,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்று ஆப்பு வைத்துள்னர்.

இதன் காரணமாக நாட்டின் சாதாரண குடிமக்கள் வங்கிக்கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதிக வரிகளை வசூலித்துவரும் நிலையில் எதிர்காலத்தில் மேலும் இரண்டு வகையான வரிகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, சாதாரண மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி