1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எமது நாட்டின் முத்தரப்பு ஜனநாயக கட்டமைப்பில்,

நிறைவேற்றுநர், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களிலும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையும், அதேபோல இவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறைபாடுகள் இருப்பின், தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலயே இது திருத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஒரு நிறுவனம் மற்றொன்றை அடக்கி அல்லது மௌனமாக்கும் பிம்பத்தை உருவாக்காதீர்கள். வேறு ஒரு முறையைப் பின்பற்றி, ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்யும் அரசியலமைப்பு முறைக்குச் செல்ல வேண்டும். உயர் நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை ஆராய தெரிவுக் குழுக்களை நியமிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறைபாடுகள் இருப்பின் வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க சட்டரீதியான ஏற்பாடுகள் ஊடாக இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யார் வெளிநாடு சென்றாலும், அல்லது இந்நாட்டில் தங்கினாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் தனது பணியை செய்து வருகிறேன். தான்  மாளிகையில் இருந்தாலும் அல்லது தனது தனிப்பட்ட வீட்டில் இருந்தாலும் தான் தன்னுடைய வேலையை செய்து வருகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாட்டுக்கு பெறுமானம்  சேர்க்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி