1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காலி மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற

உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

காலி மஹிந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தொழில் ரீதியாக சட்டத்தரணியாவார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஊடாக அரசியலில் பிரவேசித்த அவர் காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
 
லயனல் பிரேமசிறி 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
 
அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து 2007-2010 காலப்பகுதியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சராக கடமையாற்றினார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி