1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் நிதியமைச்சர் ரவி

கருணாநாயக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இந்த தகவலை ரைம்ஸ் ஒவ் இந்தியா வெளியிட்டுள்ளது.
 
தேசம் பொருளாதார மீட்சி சவால்கள் மற்றும் புதிய அரசியல் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே கருணாநாயக்க போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
 
மறைந்த லலித் அத்துலத் முதலியின் வழிகாட்டலின் கீழ் கருணாநாயக்க தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
 
1994 இல், அவர் இளம் எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 
 
2015 ஆம் ஆண்டு இலங்கையின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 
 
இவர் வெளியுறவுத்துறை, மின்சாரம், எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றினார்.
 
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கருணாநாயக்க வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரானார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி