1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை ஜனாதிபதிக்கு முன்னதாகவே பசில் ராஜபக்க்ஷ குற்றம் சுமத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய கூட்டணிக்கு வரவேண்டும். ஆனால் ராஜபக்க்ஷர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு தெரிவித்ததாக தெரியவருகிறது.
 
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையில் இல்லாத ராஜபக்க்ஷர்களின் பங்கேற்புடன் கூடிய பரந்த கூட்டணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டணியில் இணைய விரும்பும் ஏனைய கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பசில் ராஜபக்க்ஷ ஆவேசமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
 
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்ற போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் பசில் ராஜபக்க்ஷ தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது
 
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான இந்தச்  சந்திப்பு கடந்த 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி