1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கல்முனை மாநகர சபையின்  முன்னாள் 

உறுப்பினரான  ஆசிரியர்  பி.எம் சிபான் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவுக்கு   பகிரங்க கடிதம் ஒன்றை் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

அன்புள்ள அதாவுல்லாஹ் சேர்!

எப்போதும் தங்களின் இரசிகனும்,போராளியும், ஆதரவாளனுமாக இருந்து இடையில் காலத்தின் கோலத்தால் விலகி மயிலின் வார்த்தை ஜாலத்தால் ஏமாந்து போன என்னால் தங்களுக்கான விண்ணப்பம், மடலாக...!

கடந்த கால்நூற்றாண்டுகளில், ஒரு முறை தவிர ஏனைய அனைத்துத் தவணையிலும் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல வடிவில் இந்நாட்டுக்காகவும்,பிராந்தியம், ஊர் என பல்வேறு வகையிலும் சேவை செய்தவர். இதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 

அது போல மஹிந்தரின் உற்ற நண்பர் நீங்கள்.  இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலே  குதிரையிலே தனித்து நின்றதனால் என்னவோ, பஸிலினால் ஏதோவொருவகையில் ஒதுக்கப்பட்டும், ஓரங்கட்டப்பட்டும் வந்தீர்கள். 

தனியாக சபை கோரிய சாய்ந்தமருது ஊரே ஓரணியில் திரண்டு நின்று உங்கள் குதிரையை வெல்ல வைத்தது.
ஆனால் பஸிலுடன் உள்ள முரண்பாட்டினால் என்னவோ, எதற்காக உங்களை நம்பி வாக்களித்தார்களோ, அதனை இன்றுவரை நிறைவேற்ற முடியாத துர்ப்பாக்கியசாலியாக நீங்களானீர்கள்.

இந்தப்பிராந்தியமே ஏறக்கூடாதென நீங்கள் முரசறைந்த ரணிலின் பஸ்ஸில் சபை வேண்டி நீங்களே ஏறியும், உங்களால் இன்றுவரை சபைக் கனவை நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை.

தலைவரே! 

பிராயச்சித்தமாகவும், மீள ஒருமுறை இந்த மருதூர் சமூகம் தங்களில் நம்பிக்கை வைத்து மீள வாக்களிக்கவும்,தொடர்ந்தும் தங்கள் குதிரையிலேயே பயணிக்கவும், மருதூருக்குள் மீள மரமோ,மயி(ரோ)லோ வராமல் தடுக்கவும் மீதமுள்ள பாராளுமன்ற காலத்தை சலீம் DS க்கு உவந்தளித்தால் என்ன?  

பெருந்தலைவர் அஷ்ரப் 1994 களிலே, "அம்பாறை மாவட்டத்தின் ஒரு தொகுதியையேனும் தோற்பின் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை துறப்பேன்" என சவால்விட்டு தான் பதவி துறந்து தொப்பி முகைதீனுக்கு உவந்தளித்து செய்து காட்டியதனை, பெருந்தலைவர் பாசறையில் வந்த நீங்கள் [சவால் விடாவிடினும்] ஏன் ஒருமுறை செய்து காட்டக்கூடாது? உங்கள் மீதுள்ள களங்கத்தை ஏன் போக்கக்கூடாது?

தமதூருக்கு சபை வேண்டுமென்பதற்காக, கடந்த மாநகர தேர்தலிலே தாம்பூலத்தில் வைத்துக்கொடுத்த மேயர் பதவியை துச்சமெனமதித்து உதறித்தள்ளிய மருதூர்மண், இந்த எஞ்சிய பாராளுமன்ற காலத்திலாவது சலீம் DS ஐ கொண்டு (தம்மில் ஒருவரைக் கொண்டு) முயற்சிப்பதற்கும்,மீளவொருமுறை தங்களுடன் தோளோடுதோள் நிற்க வாய்ப்பாக போகுமல்லவா? மகுடம் தரித்திரிப்பினும், மகுடம் துறந்திருப்பினும் தலைமை தலைமைதானே!!

சிபான் BM.

முன்னாள் உறுப்பினர்.கல்முனை மாநகர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி