1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்சி மீது வழக்குத் தொடுத்து

தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு  எவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்ற கால அவகாசம் வழங்க முடியும்  என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான 

லக்க்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கட்சியில் இருந்து நீக்குவது குறித்தோ அல்லது அவ்வாறான யோசனையையோ இல்லாதநிலையில் இணையதளம் ஒன்றில் வெளியான பொய்யான செய்தியின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக சரத் பொன்சேகா வழக்குத் தாக்கல் செய்தார் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார் .
 
கட்சித் தலைவர் தன்னுடன் பேச வேண்டாம் என்று ஒரு போதும் கூறவில்லை என்பதையும்  கட்சி மீது வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் அவருக்கு நேரம் ஒதுக்குவது ஏற்புடையதல்ல என்பதையும் உணர்ந்து தான் இவ்வாறான முடிவை எடுத்ததாக கிரியெல்ல தெரிவித்தார் .
 
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகா தன்னுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என பாராளுமன்றத்தில்  முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார் .  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி