1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும்

இடையே நடக்கும் போரில் இஸ்ரேலுக்கு தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் இதுபோன்ற போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனானைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஹிஸ்புல்லா தனது அமைப்பைப் பாதுகாக்க வல்லது என்றும் ஈரான் கூறியது.
 
இஸ்ரேல் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தால், இரு நாடுகளும் ஒரு புதிய போருக்கு தள்ளப்படும் மற்றும் லெபனானின் உட்கட்டமைப்பு கடுமையாக சேதமடையும் அதேவேளை இறுதியில் இஸ்ரேல் தோற்கடிக்கப்படும் என்று ஈரான் கூறுகிறது.
 
இஸ்ரேல் தன்னைத்தானே அழித்துக் கொள்ள முயலும் நேரம் வந்துவிட்டது என்றும் ஈரான் கூறியுள்ளது.
 
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்திருத்தார்.
 
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா விடுத்துள்ள அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கத் தேவையான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று கூறுகிறது. 
 
இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் தொடங்கினால் தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் அமெரிக்கப் படைகள் ஒருபோதும் தலையிடாது என்றும் அமெரிக்க அரசின் சிரேஷ்ட  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி