1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொலன்னறுவை ஹபரணை

பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு நான்கு முகாமையாளர்கள் மற்றும் 11 விபசாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

ஹிங்குராக்கொட நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் நடவடிக்கை உத்தரவுகளை பெற்றதன் பின்னர் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.பண்டார தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
திம்புலாகல தலுகானை, ஹபரணை, களனி, மொனராகலை, பூனானி, அநுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த முகாமையாளர்கள் விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மசாஜ் நிலையங்கள் நீண்டகாலமாக இயங்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி