1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் மிகப் பெரிய அரசியல்

கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என்றும் அவர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்றும் காத்திருக்கிறது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (5) காலை கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழில் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நம்பிக்கையில் தாம் செயற்படுவதாக தெரிவித்த தம்மிக்க பெரேரா, தேர்தலில் வெற்றிபெற தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது 44 சத வீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்போம் என தீர்மானிக்கவில்லை எனவும், சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு வருடங்களாக பிரசாரம் செய்து வருவதாகவும் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை எனவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அடுத்த 90 நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவார்கள் என்பதை விளக்க வேண்டியதன் அவசியத்தையும் எம்.பி விளக்கினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி