1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

விமானம் மூலம்  6 கோடி ரூபாவுக்கும்

அதிகமான பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப் பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகரின் கார் ஒன்று மொடல் அழகி பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் மூலம் 5 கிலோ கொக்கேய்ன் மற்றும் 500 கிராம் போதைப் பொருளை இறக்குமதி செய்து  அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மற்றொரு நபரை அனுப்பி வைத்தார் என  சந்தேகிக்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸாரைத் தவிர்த்து நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்தார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் பதும்குமார உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி சந்தேகநபர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் வசிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி