1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சபாநாயகரிடம் சொத்துப் பொறுப்பு

அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய 169 எம்.பிக்களில் 69 எம்.பி.க்கள் மாத்திரமே சொத்து பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம்  திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே சபாநாயகரிடம் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கும் அதேவேளை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சொத்துப் பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
 
இந்நிலையில், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தை சமர்ப்பிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
 
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதற்கிடையில், இருபது எம்.பி.க்கள் மட்டுமே தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இணையதளத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி