1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கைது செய்யப்பட்ட நபருக்கு

எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க 454,200 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிளையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா இன்று (06) உத்தரவிட்டுள்ளார். 

முதலில் மூன்று இலட்சம் ரூபாவை பெற்ற பின் மீதி 154,200 ரூபாவைப் பெற்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இப்பாகமுவ தெஹல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி