1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தென்கொரியாவுக்குச் சென்று

கொண்டிருந்த  இலங்கை விமானம்  ஒன்று  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரண்டு மணி நேர பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

UL-470 ரக விமானமே தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
நேற்று (08) மாலை 06.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்த விமானத்தில் 144 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்தனர்.
 
எவ்வாறாயினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் இரவு 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்தப் பயணிகளை வேறொரு விமானத்தில் தென்கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி