1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அதுருகிரிய பிரதேசத்தை பீதியடையச்

செய்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரபல தொழிலதிபர் 'சுரேந்திர வசந்த பெரேரா' அல்லது 'கிளப் வசந்த' உட்பட இருவரைக் கொன்றது மற்றும் நான்கு பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பச்சை குத்தும் நிலைய உரிமையாளரான சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் பத்து இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து கிடைத்த கொந்தராத்துக்காக  கிளப் வசந்தவைக் கொலை செய்ய உதவி செய்தேன்.  அந்தத் திட்டப்படி தான் வசந்தவை பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவுக்கு அழைத்து வந்து கொல்ல திட்டமிட்டேன். அதற்காக துபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாவைப்  பெற்றேன்  என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அத்துருகிரிய பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் பொலிஸாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG 20240709 101849 800 x 533 pixel

நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காணப்பட்ட  T-56 வெற்று தோட்டா உறைகளில் KPI என்ற ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

இதன்படி இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவன் கஞ்சிபான இம்ரான் தலைமையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கஞ்சிபான இம்ரான் என்ற பெயரிலான எழுத்துக்களில் கேபிஐ என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

IMG 20240708 143611 800 x 533 pixel

நேற்றுக் (08) காலை 10.00 மணியளவில் அதுருகிரிய நகரின் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள அழகு (பச்சை) நிறுவன திறப்பு விழாவின் போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

'கிளப் வசந்த' மற்றும் பலர் மேல் தளத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களில் வெள்ளை நிற நீண்ட கை சட்டை மற்றும் வெள்ளை முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய இரண்டு கொலையாளிகள் ஒரு வெள்ளை காரில் இருந்து குறித்த மேல் தளத்தில் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாகக் காணப்படுகிறது.

wasantha24

முகமூடி அணிந்த இரண்டு கொலையாளிகள் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் பச்சை குத்தும் நிலையத்துக்குள் நுழைந்து கிளப் வசந்தா மற்றும் அங்கிருந்தவர்கள் மீது சுட்டதையும் இது காட்டுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி