1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுரேந்திர வசந்த பெரேரா அல்லது

கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (09) கருத்து வெளியிட்டார்.

அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் நேற்றுக் (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உயிரிழந்துள்ளார்.
 
துபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெற்றி் மற்றும்  கோவிலே சாந்தா ஆகிய இரு குற்றவாளிகள் நேரடியாகவே  திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
 
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர்,
 
“தற்போதைய விசாரணைகளின்படி குற்றத்தை செய்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இவ்வாறான குற்றத்தை யாருடைய நலன்களை முன்னிறுத்தி செய்யப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய விசாரணைகளின்படி இந்தக் குற்றத்தை எந்தக் குற்றவாளிகள் வழிநடத்தினார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
 
"குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்."
 
"ஒரே நாளில் ஏழெட்டு பேர் சுட்டுக் கொல்லப்படும் நிலை இந்த நாட்டில் இருந்தது. இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒரு குற்றம் நடந்துள்ளது. சட்ட விரோதமான துப்பாக்கிகள் இன்னும் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன."
 
எனவே, யுக்திய நடவடிக்கையிலும் சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி