1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் பிரதான பாலத்தடியில்

சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்க பட்டுள்ளமை குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய பிரதேசத்தில், நேற்று திங்கட்கிழமை (8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாருக்குச் சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு  தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது.

இதற்கமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன.

அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக வேறு மாவட்டங்களிலிருந்து மன்னாருக்குள் நுழையும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி