1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்

முறையாக நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவ இந்த மனுவை இன்று (12) தாக்கல் செய்துள்ளார்.
 
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்துக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70 வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.
 
இந்த சட்டத்திருத்தத்தை பொதுவாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்ப்பளித்த போதிலும், அந்தத் திருத்தம் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி