1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தான் பதவி ஏற்கும்போது காணப்பட்ட

வருமானத்தை  விட தற்போது எட்டு மடங்கு அதிகரிக்க முடிந்ததாக ருஹுணு கதிர்காமம்ம காதேவாலய நிலமே திஷான் குணசேகர தெரிவித்தார்.

பஸ்நாயக்க நிலமேவாக கடமையாற்றும்போது 50 மில்லியன் ரூபாவாக இருந்த வருடாந்த வருமானம் தற்போது 400 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 214 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக ருஹுனு மகா கதிர்காமம் ஆலயத்தின் வருமான அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

காணிக்கைகளை நேரடியாக  கோயில் காணிக்கை பெட்டிகள் மற்றும் அலுவலகத்துக்கு வழங்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டு வருவதே வருமானம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என ஆண்டு வருமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மக்கள் தமது  காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,  ஆலயத்தின் வருமானத்தில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு  இம்மாதம் 23ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.

500 படுக்கைகள் கொண்ட இந்தப் வைத்தியசாலை கடற்படையின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி