1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிறுவர் பாதுகாப்பு ஒரு தேசிய நெருக்கடியாகும். சொர்க்கமாகத் திகழும் எமது தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலத்துக்கும் ஒரு பிள்ளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றது.

என்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுவதுடன், வன்முறைக்கு எதிரான சிறுவர்களின் பாதுகாப்பைப் பொறுத்த வரை, உலகின் மிகவும் பாதுகாப்பற்ற 10%நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

Stop Child Cruelty Trust (SCC) இன் செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசின் கட்டாயப் பொறுப்பினை நிறைவேற்றவும், சட்டவாக்கத்தில் உள்ள முரண்பாடுகளைத் திருத்துவதற்கு உடனடி தீர்வு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட, உடல் ரீதியான தண்டனை தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அண்மைய முக்கிய தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட நிபுணர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

'இருண்ட மரபினை நிறுத்துவோம்!' என்றஆரம்பத்துடன், SCC  மூன்றாண்டு காலமாக சேவையை தொடருகின்றது என்பதனை உற்சாகத்துடன் குறிப்பிடுகின்றது.

தேசிய பத்திரிகை ஸ்தாபனத்தில், 2021மார்ச் 5ஆம் திகதி கொவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்ற ஊடக மாநாட்டில், SCC இன் ஸ்தாபக தலைவர் டொக்டர் துஷ் விக்ரமநாயக்க, குழந்தைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, கூட்டாக சமூகப் பொறுப்பை ஏற்க பொதுமக்களை வலுவூட்டிய,2020ஆம் ஆண்டில் #JustSayNo பிரசாரத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தமையை விளக்கினார்.

‘#JustSayNo -'இருண்ட மரபினை நிறுத்துவோம்' என்பது சிறுவர் பாதுகாப்பில் நிபுணத்துவம் கொண்டோருடனான நேரடி செவ்விகள் முதல் ஊடக மாநாடு மற்றும் உடல் மற்றும் உள ரீதியான தண்டனைகளை நிராகரிப்பதன் மூலம் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான கல்வியை அங்கீகரிக்கும் பாடசாலை மாணவர்களுடனான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட விவாதத் தொடர் வரையிலானவற்றை உள்ளடக்கிய தொடர் நிகழ்வுகள்”, என்று விக்ரமநாயக்க மேலும் விளக்கினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழி திணைக்களத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய, சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன,  சமூக செயற்பாட்டாளர் மற்றும் SCC இன் ஆதரவாளர்,  பூமி ஹரேந்திரன், இளைஞர் விவகார செயற்பாட்டாளர் மற்றும் SCCஇன் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவர், ஷைனுஜா இன்பநாதன்,  இலங்கையின் முன்னாள் திருமதி அழகுராணி மற்றும் சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் சந்தி அலுவிஹார, கொழும்பு மருத்துவ பீடத்தின் ரொட்டரேக்ட் கழகத்தின் தலைவர் தனுஜா கொட்டவலகெதர ஆகியோர் குழுவின் பேச்சாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் முக்கிய தலைப்புகளாக இடம்பெற்றிருந்தவை:  உடல் ரீதியான தண்டனை மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திடம் 11வயது இலங்கை சிறுமி மேற்கொண்ட வரலாற்று ரீதியான முறையீடு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டுதல், தேசிய சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கம் மீதான அழுத்தம் குறித்து செனவிரத்னவும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஒரு தேசத்தின் பொறுப்புகள் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான மரபுரிமை தொடர்பில் பேராசிரியர் விஜேசூரிய, துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு சிறுவர்களுக்கு அவசியமான பாலியல் கல்வி மற்றும் சிறுவர்களை வலுவூட்டல் தொடர்பில் அலுவிஹார ,  சிறுவரை உரிமைதாரராக அங்கீகரித்தல் தொடர்பில் ஹரேந்திரனும் உரையாற்றியிருந்தனர்.

இந்த புரட்சிகரமான விவாதத் தொடரான 'பரபுரக அபியாச்சனைய',  கொட்டவல்கெதரவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சிறுவர் பாதுகாப்பில் மாணவர்கள் நேரடியாக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். வென்ற அணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் விஜேசூரிய நேர்மறையான ஒழுங்கு முறைகள் குறித்து எழுதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். துஷ்பிரயோகத்திற்கு ஆளான குழந்தைகளின் 10விடய ஆய்வுகளின் தொகுப்பை எழுதுவதற்கு சிறந்த பேச்சாளருக்கு SCC மானியம் வழங்கியமை இதன் சிறப்பம்சமாகும்.இந்த ஆய்வு தொகுப்புகள் காலக்கிரமத்தில்  SCC இனால் வெளியிடப்படும்.

சிறுவர் பாதுகாப்பில் தெளிவான முற்போக்கான மாற்றங்களை உருவாக்க சிவில் சமூக அமைப்புகளுடன் அரசாங்கம் நெருக்கமாக பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், Stop Child Cruelty Trust எமது எதிர்காலத்தின் உண்மையான பயனாளிகளான குழந்தைகளுக்கான சமத்துவம், நீதி மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுத்தது.

மேலதிக விபரங்களை www.stopchildcruelty.com என்ற இணையத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி