1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழகத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி இப்போது கூடுதலாக ஆயிரம் விளக்குகளை தன்னுள் பொருத்திக் கொண்டு ஜோதியாக எரிகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் நடிகை குஷ்பூ 

இத்தொகுதியில் களமிறக்கப்பட, போட்டி சுவாரஸ்யமாகியுள்ளது. அனல் பறக்கிறது. ஆனால். எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி, அத்தொகுதியில் வசிக்கும் ரஜினிகாந்தின் வாக்குகள் யாருக்கு என்பதே?

அரசியலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி கரை ஒதுங்க, அவரது ரசிகர்கள் இந்த நிமிடம் கூட ஏதாவது அதிசயம், அற்புதம் நடந்து விடாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

காரணம், 25ஆண்டுகளாக 'அவர் வருவார்' என்ற எதிர்பார்ப்புடன், எத்தனையோ ரசிகர்கள் காசு பணம் பார்க்காமல், குடும்பம் பார்க்காமல், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்தனர். ஆனால், அவையனைத்தும் ரஜினியின் ஒற்றை அறிக்கையில் தூள்தூளாகின. 

தேர்தலில் களமிறங்கவில்லை என்றாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு வாக்களிக்கப் போகிறார் என்பது இன்றும் பரபரப்பான எதிர்பார்ப்பாகும். ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க சார்பில் மருத்துவர் எழிலனும், பா.ஜ.க சார்பில் குஷ்புவும் போட்டியிட, தி.மு.க vs அ.தி.மு.க என்ற நிலை மாறி, திமுக vs பா.ஜ.க என்று களம் சூடுபிடித்துள்ளது.

பொதுவாக இந்த தொகுதி தி.மு.க கோட்டை என்றாலும், இம்முறை குஷ்பூ களமிறங்கியுள்ளதால் அவரது செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை மே 2ம் திகதிதான் அறிய முடியும். எனினும், இரு வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எழிலன், தி.மு.க தலைமையின் குடும்ப மருத்துவர் என்பதால், அவருக்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. ரஜினிக்கும் இவரை நன்கு தெரியும். பிரபலமான மருத்துவர். கருணாநிதியின் மருத்துவர் என்ற அளவில் ரஜினிக்கு தெரியும்.

குஷ்புவை பொறுத்தவரை எதுவும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எத்தனையோ படங்களில் ரஜினிக்கு ஹீரோயின். 'பெஸ்ட் ஒன் ஸ்க்ரீன்' ஜோடியாக வலம் வந்தவர்கள். சினிமா மட்டுமல்ல, அதைத் தாண்டி ரஜினி குடும்பத்துடன் எப்போதும் நெருக்கமாக இருப்பவர் குஷ்பூ.

ரஜினியின் மனைவி லதாவின் சிறந்த தோழிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக குஷ்பூவின் நெருக்கமானவர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினி.  ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது, அவரை பெரியளவில் பாதிக்கச் செய்யும் பணியை ஆவிபறக்க செய்த கட்சிகளில் உச்ச இடத்தில் இருந்தது தி.மு.கதான். அ.தி.மு.க ரஜினியை எந்த இடத்திலும் உரசவில்லை.

ஆனால், ரஜினியின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் தோண்டியெடுத்து, மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி விட்டுக் கொண்டிருந்தது தி.மு.கதான்.

தி.மு.கவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது ரஜினி மட்டும்தான்.

இன்னும் சொல்லப் போனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பெரும் தலைவலியாக, வெளியே சொல்ல முடியாத புலம்பலாக இருந்தது ரஜினிதான். ரஜினி களத்திற்குள் வந்தால், தி.மு.க, அ.தி.மு.க என்று பல கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்பதால் ஏற்பட்ட கலக்கம் அது. இப்போது ரஜினியின் ஆதரவு என்பது யாருக்கு என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

குஷ்புவோ, 'ரஜினியின் ஆதரவு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும்' என்று வெளிப்படையாக கூற, எழிலனோ, 'அவரு யாருக்கு வேணாலும் வாக்கு போடட்டும்' என்கிறார். நட்பின் அடிப்படையில் பார்த்தால் ரஜினியின் வாக்கு, குஷ்புவுக்கு கிடைக்கும் எனலாம்.

ஆனால், ரஜினிக்கு வேறு திட்டம் இருக்கிறது என்கிறார்கள் சிலர். தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி என இருவருக்குமே வாக்களிக்காமல், வேறு ஒரு புதியவருக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணம் ரஜினிக்கு இருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக, நண்பர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் ரஜினி பரிசீலனையில் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி