1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பணத்தின், நிலாவரை கிணற்று பகுதியில் இராணுவத்தினரும் , தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினரும் புத்த விகாரை அமைப்பதற்கு, தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு நடவடிக்கை 

முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் அதிகளவான மக்கள் ஒன்றுகூடியதையடுத்து, மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர், நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதமும் இதே பகுதியில் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராட்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் உட்பட அதிகளமான மக்கள் ஒன்றுகூடியதையடுத்து மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற இப்பகுதியை குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது.

அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி