1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

'சிரச' ஊடக வலையமைப்பிற்கு வழங்கப்படும் அனைத்து அரசு தொடர்பான விளம்பரங்களும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் படி உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, 'சிரச'வில் ஒளிபரப்பப்படும் அரசு வங்கி விளம்பரங்களும் சீட்டிலுப்பு விளம்பரங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் கூற்றுப்படி, ரக்வானயில் வசிக்கும் பாக்யா அபேரத்ன, சிரச தொலைக்காட்சியில் 'லட்சாதிபதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, நிகழ்ச்சியின் போது சிங்கராஜ சூழலை அழிப்பது குறித்து ஒரு கருத்தை கூறினார்,இது எதிர்க்கட்சிக்கு அதிக விளம்பரத்தை ஏற்படுத்திக்கொடுத்த செய்தியாக ஒளிபரப்பப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் அறிக்கையின்படி, அரசாங்கத்தின் விளம்பர வெட்டுக்களால் 'சிரச' ஊடக வலையமைப்பிற்கு மாதாந்தம் ரூ .50 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சிரசவுக்கு ஒரு புதிய அனுபவம் அல்ல, முந்தைய அரசாங்கங்களால் அவ்வப்போது சிரசவுக்கு இதுபோன்ற பல அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

கடந்த காலங்களில், சிரச மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதிகள் செய்த அச்சுறுத்தல்களை மட்டுமல்லாமல், நிறுவனத்திற்கு தீ வைத்ததிலிருந்து பல அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளது.

மொபிடெல் வெளியேறுகிறது டயலொக் வருகிறது!

சிரசவின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான தி வாய்ஸை ஸ்பான்சர் செய்த மொபிடெல், இந்த ஆண்டு விளம்பரங்களை நிறுத்தி வைத்தபோது அதன் அனுசரனையையும் மீளப்பெற்றுள்ளது.

ஆனால் இதில் விசேடம் என்னவென்றால், பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே 'தி வாய்ஸ்' மற்றும் 'லட்சாதிபதி' போன்ற சிரச நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி