1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருமதி இலங்கை அழகி தெரிவின் போது ஏற்பட்ட சர்ச்சை, இன்று சர்வதேசம் வரை எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.கொழும்பு தாமரை தடாக அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, திருமதி இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

எனினும், உலக அழகி போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த கரோலின் ஜுரி, புஷ்பிகா டி சில்வாவிற்கு இந்த கிரீடத்தை வழங்க, அவர் தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்திருந்தார்.

இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாகவே பேசுபொருளாக மாறியுள்ளது.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு - கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புஷ்பிகா டி சில்வா

புஷ்பிகா டி சில்வா

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையொன்றின் ஊடாகவே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், இலங்கை பிரபலங்கள் இந்த சம்பவம் தொடர்பில் என்ன கூறுகின்றார்கள் எனறு பார்ப்போம்

உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க, ஊடகங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

உலக திருமதி அழகுராணியொருவர், மேடையில் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் கவலை அடைவதாக ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.

உலக நிபந்தனைகளுக்கு அமையவே, செயற்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

நடுவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கரோலின் ஜுரிக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.

அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.

அழகு கலை நிபுணர்களின் கருத்து

நயனா கருணாரத்னா

நயன கருணாரத்ன

பிரபல அழகு கலை நிபுணர் நயன கருணாரத்னவிடம் கூறுகையில்

இந்த சம்பவமானது, மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என பிரபல அழகு கலை நிபுணர் நயன கருணாரத்ன தெரிவிக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் போட்டியாளர்கள் தகுதியானவர்களா இல்லையா என்பதை முதலிலேயே அடையாளம் கண்டுகொண்டிருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்

கிரீடத்தை சுவீகரித்ததன் பின்னர் உலக போட்டிகளிலும்; சில தவறுகள் ஏற்படுவது வழமையானது என கூறும் அவர், அந்த தவறுகளை திருத்திக் கொள்ளும் நடைமுறையொன்று காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

கீரிடத்தை அணிவித்ததன் பின்னர், தவறு இழைக்கப்பட்டுள்ளது என உறுதியாகும் பட்சத்தில், தனிப்பட்ட ரீதியில் அழைத்து தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.

அதைவிடுத்து, இவ்வாறு நடந்துக்கொள்வது, மிகவும் மோசமான விடயம் என பிரபல அழகு கலை நிபுணர் நயனா கருணாரத்ன தெரிவிக்கின்றார்.

பிரபல அழகு கலை நிபுணரும், அழகு கலை நிபுணர்கள் சங்கமான சலாஅப் சங்கத்தின் தலைவருமான கயல்விழி ஜெயபிரகாஷ், கருத்து தெரிவிக்கையில்

கயல்விழி ஜெயபிரகாஷ்

கயல்விழி ஜெயபிரகாஷ்

கிரீடம் அணிவிக்கப்பட்டதன் பின்னர், அந்த கிரீடத்தை அதேமேடையில் வைத்து மீளப் பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என கயல்விழி ஜெயபிரகாஷ் தெரிவிக்கின்றார்.

புஷ்பிகா டி சில்வா, தகுதியற்றவர் என்றால், அவரை போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்ட போதிலும், வெற்றியீட்டியதன் பின்னர், இவ்வாறு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறுகின்றார்.

உலக அழகு ராணியாக தெரிவான ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடாது என கயல்விழி ஜெயபிரகாஷ் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் பிரபல நடிகை நிரஷ்ஜனி சண்முகராஜாவின் பதில்

உலக அழகியான தெரியான ஒருவர், மேடை நாகரீகம் தெரியாது நடந்துகொண்டுள்ளதாக நிரஷ்ஜனி சண்முகராஜா தெரிவிக்கின்றார்.

கிரீடத்தை சூடுவதற்கு முன்னரேனும், இந்த அறிவிப்பை அறிவித்திருந்தால், அது ஏற்றுக்கொண்டிருக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

நிரஷ்ஜனி சண்முகராஜா

நிரஷ்ஜனி சண்முகராஜா

எனினும், கிரீடத்தை சூடியதன் பின்னர், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டமையானது, மிகவும் மோசமான செயற்பாடு என அவர் கூறுகின்றார்.

அழகி என்பது உருவத்தை அடிப்படையாக வைத்து மதிப்பிட முடியாது என கூறும் அவர், ஒருவரின் மனம் மற்றும் சக மனிதனை எவ்வாறு பார்க்கின்றோம் என்பதிலேயே உண்மையாக அழகு இருக்கின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

விவாகரத்து பெற்ற ஒருவர், எதற்கும் தகுதியில்லை என்ற கோணத்தில், மேடையில் பகிரங்கமாக அறிவிப்பதானது, பெண்மைக்கு செய்யும் அநீதி என அவர் கூறுகின்றார்.

திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெருமளவிலான பெண்களையே, அவமானப்படுத்தியது போன்றே தான் இந்த சம்பவத்தை உணர்வதாக அவர் தெரிவிக்கின்றார்.

உலக அழகி என கிரீடம் சூடிய ஒருவர், உலகிற்கே உதாரணமாக நடந்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஒரு பெண்ணுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஒருவரே, அழகி என்ற இடத்திற்கு தகுதியானவர் என கூறும் அவர், கிரீடத்தை சூடிக்கொண்டிருக்கும் பெண்ணொருவரே, மற்றுமொரு பெண்ணை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறுகின்றார்.

திரைப்பட தயாரிப்பாளரும், பிரபல சிங்கள திரைப்பட நடிகையுமான ரேணுகா பாலசூரிய கூறுகையில், RENUKA BALASOORIYA

ரேணுகா பாலசூரிய

திருமதி அழகியொருவரை நடுவர் குழுவொன்று தெரிவு செய்திருந்த நிலையில், அதனை நிராகரித்து, மற்றுமொருவரை அறிவிக்கும் அதிகாரம் எவ்வாறு அவருக்கு கிடைத்தது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இது காலத்தை வீணடிக்கும் ஒரு செயற்பாடு என தான் கருதுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கிரீடத்தை சுவீகரித்ததன் பின்னர், அதனை பறிப்பது எவ்வாறு என தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என திரைப்பட தயாரிப்பாளரும், பிரபல சிங்கள திரைப்பட நடிகையுமான ரேணுகா பாலசூரிய தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், கிரீடத்தை புஷ்பிகா டி சில்வாவிற்கே வழங்க ஏற்பாட்டு குழு மீண்டும் தீர்மானித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி