1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நச்சு உணவுகளை இறக்குமதி செய்வதில் உள்ள அனைத்து தவறுகளையும் மறைத்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சித்திகா சேனாரத்னவை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டு அவர் அளித்த பேட்டியில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உணவு மற்றும் பானங்களில் நச்சுகள் இருப்பதாகவும், நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் என்பதால் அவற்றை வெளியிடவில்லை என்றும் தெரிவித்த அவர்,ஆனால் இப்போது நாட்டில் விசம் கலந்த உணவுகளால் நிலைமை மோசமாகிவிட்டது என்று கூறினார்.

இந்த நச்சு உணவுகள் பல ஆண்டுகளாக விதிகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் எந்தவித இடையூறும் இன்றி விற்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மற்றொரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இந்த நச்சு உணவுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் மோசடி நிறுவனங்களுடன் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, சித்திகா சேனாரத்ன மீது பழியை சுமத்தி, பிரச்சினையிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்கின்றது.

"சித்திகாவிற்கு சிங்களம் சரியாக பேசத்தெரியாது" - அமைச்சின் செயலாளர்

இதற்கிடையில், அஃப்லாடாக்சின் பல உணவுகளில் காணப்படும் புற்றுநோயாகும் என்று தொழில் அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா கூறுகிறார்.

ஜயந்தா டி சில்வா, தரநிலை நிறுவனத்தின் பணிப்பாளர் சித்திக சேனாரத்ன அளித்த அறிக்கை உண்மை இல்லை என்றும் சிங்கள மொழியைப் பயன்படுத்துவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாகவும் கூறுகிறார்.

மறைக்கப்பட்ட எந்தவொரு தரவையும் உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளியிடுமாறு ஜனாதிபதி  அறிவுறுத்தியுள்ளதாகவும், அத்தகைய மறைக்கப்பட்ட தரவு எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (07) தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரை தொழில் அமைச்சிற்கு அழைத்து அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி