1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தனது உலக திருமதி அழகுராணிப் பட்டத்தை திருப்பிக் கையளிப்பதாக கரலின் ஜுரி அறிவித்துள்ளார்.

தானாக தனக்கு யார் மீதும் தனக்கு தனிப்பட்ட கோபம் இருக்கவில்லை எனவும் எந்த நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருக்கவில்லை எனவும் தமக்கு திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியில் பங்கெடுத்த அனைவரும் விசேடமானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நியாயமான வாய்ப்புக்கள் இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் தான் ஆரம்பமுதலே கூறியதாகவும்

ஆனாலும் தனது கோரிக்கைகள் செவி மடுக்கப்படாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 4ம் திகதி நடைபெற்ற

திருமதி இலங்கை அழகுராணிப்போட்டிக்கு முதல்நாள் நடுவர் குழாமில் இருந்து வெளியேறியதாகவும் கரலின் ஜுரி தெரிவித்துள்ளார்.

தாம் எப்போதும் விழுமியங்களுக்கு அமைய நடப்பவர் எனவும் தனது நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமையால் தனது உலக திருமதி அழகு ராணி பட்டத்தை திரும்பக் கையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக ஒரு பெண்ணிற்கு நியாயமான வாய்ப்புக் கிடைப்பதே முக்கியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்ததை அடுத்து இதுகுறித்து தாம் பெரிதும் கவலை கொள்வதாகவும், தனக்கு யாருடனும், தனிப்பட்ட விரோதமோ, தனிட்ட ரீதியான கோபதாபங்களோ இல்லை என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவின் தமிழ் மொழியாக்கம் சுருக்கமாக..

ஆயுபோவன்
வணக்கம்
உலக வாழ் அனைவருக்கும்,

113571437 348838126515955 869992378500187461 nஎனது அழகான நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் அனைத்து இலங்கையருக்கும்,

கீரிடம் வென்ற மற்றும் கீரிடத்திற்காக போட்டியிட்ட அனைத்து அழகு ராணிகளுக்கும்,

இறுதிப் போட்டியில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து உண்மையில் மனம் வருந்துகிறேன்.

எனக்கு யாருடனும் தனிப்பட்ட கோபதாபங்கள் கிடையாது.

அழகு ராணி இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.

''போட்டியாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்தி, அதற்கேற்ற வெற்றியைப் பெறுவதற்கான சமமான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதற்காக நானும் உழைத்தேன். எந்தவொரு போட்டியாளருக்கும் சார்பாகவோ, எதிராகவோ நடந்துகொள்ளவில்லை. நான் எப்போதும் சரி என்று தெரியும் பக்கத்தில் நிற்கிறேன்.''

2020 திருமதி உலக அழகி கீரிடத்திற்காக போட்டியிடுவதற்கான தளத்தை ஏற்படுத்திய போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தினால் எதிர்கொண்ட அசௌகரியங்களை நானும் எதிர்கொண்டுள்ளேன்.

உலக வாழ் மற்றும் இலங்கை வாழ்

கடந்த காலங்களிலும் தற்போதும் அழகு ராணிப் போட்டியில் பட்டம் பெற்ற உலகவாழ் மற்றும் இலங்கை வாழ் அழகுராணிகளுக்கு ஏற்பட்ட அதே அசௌகரியம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

அனைத்து அழகு ராணிப் போட்டிகளுக்கும் தனித்தனியான விதிமுறைகள் உள்ளன.

நான் ஆரம்பம் முதலே நியாயமான தளத்திலும், அனைவருக்குமான நியாயமான விதிமுறைகளுக்கும் அமையே என்பதை குறிப்பிட வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி