1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

"எந்தவொரு கட்சியும் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நீங்கள் இரகசியமாக முகமூடிகளை அணிந்து வெளியே நடனமாடுகிறீர்கள். நாங்கள் எப்போதும் வெளியே இருக்கின்றோம்.பொதுஜன பெரமுன எந்தக் கட்சிக்கும் அஞ்சாது. பொதுவாக நாய் வாளைச் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையது. நாய் தான் நடனமாடுகிறது. ” என்கிறார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற 'விமல் குழுமத்தின்' கூட்டம் தொடர்பாக ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அளித்த அறிக்கைக்கு அவர் பதிலளித்தார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர், "அரசாங்கத்தை ஆதரிக்கும் சில கட்சிகள் அரசாங்கம் அமைத்திருக்கும் ஆதிக்க சித்தாந்தத்திற்கு அடிபணிய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கோதபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததற்கும் பின்னர் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெருவதற்கும் ஆதரவளித்த கட்சிகளுக்கு குறைந்த மரியாதை அளிக்கப்படுவதாக தயாசிறி ஜயசேகர கூறுகிறார்.

இது அரசாங்க சார்பு கட்சிகள் சந்திப்பது ஆறாவது முறையாகும். எங்களது முதல் சந்திப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் நடந்தது. இந்த கட்சிகள் கோதபாயவை ஜனாதிபதியாக நியமிக்கவும், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவும் உதவியது. இப்போது எங்களை குறைவாகவே கவனிக்கிறார்கள். இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை எல்லா இடங்களிலும் இதைச் சொல்வேன், ”என்று ஜயசேகர மேலும் கூறினார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அண்மையில் ​​ சிறீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில்  இக்கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மாகாண சபை சட்டம் தங்கள் கட்சிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை மட்டுமே கட்சிகள் விவாதித்தன என்று கூறினார்.

அரசியல் அரங்கம் மீண்டும் சூடு பிடிக்கிறது!

கடந்த காலங்களில் அணைக்கப்பட்டிருந்த அரசியல் சூடு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை இப்போது காணக்கிடைக்கின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த சில வாரங்களாக அரசாங்கத்திற்குள் நடந்த கலந்துரையாடலால் இப்போது சூடுபிடித்துள்ளது.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பித்தது. ஆனால் இது அரசாங்கத்தில் உள்ள 'தேசியவாதிகளை' கடுமையாக கோபப்படுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் காலம் தாழ்த்தி நடத்தவிருப்பதாக வார இறுதி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிராம மட்டத்தில் அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமை​ இல்லாதது மற்றும் மாகாண சபை தேர்தலுக்கு எதிராக அரசாங்கத்தை ஆதரித்த 15 முன்னணி பௌ​த்ததுறவிகள் அரசாங்கத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று அந்த செய்தித்தாளில் வௌியான செய்தி மேலும் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி