1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பண்டுவஸ்னுவர கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு புதிய பணிப்பாளர்களை நியமிக்கும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அரசு சார்பு இணையத்தளம் 'லங்கா சி நியூஸ்' தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் பணிப்பாளரும் நீக்கப்பட்ட பின்னர் கூட்டுறவு சங்கத்தின் புதிய பணிப்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 58 வாக்குகளைப் பெற்ற நிலையில், ​​சிறீலங்கா பொதுஜனபெரமுன வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.

பண்டுவஸ்னுவர கூட்டுறவு சங்கம் சிறீலங்கா சுதந்திரக்கட்சி  58 உறுப்பினர்களையும்,பொதுஜன பெரமுன 16 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 06 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி  2025 இல் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது!

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்  சிரேஸ்ட தலைவர் ஒருவர் 'அனித்தா' செய்தித்தாளிடம், கட்சியின் பெரும்பான்மையான தலைவர்கள், வரவிருக்கும் தேர்தல்களில் சிறிய அரசாங்கக் கட்சிகளுடன் கூட்டணியில் தனித்து நிற்க வேண்டும் என்றும், 2025 க்குள் நாட்டில் அரசியல் அதிகாரத்தைப் பெறத் திட்டமிட வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் புகழ் குறைந்து வரும் நிலையில் சிறீலங்காபொதுஜனபெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்றும், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் விவாதித்துள்ளதாகவும், என்றும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை  அமைக்க 2024 ஜனாதிபதித் தேர்தல் வரை ஸ்ரீ.ல.சு.க.க்கு மூன்று ஆண்டு திட்டம் உள்ளது என்று அவர் கூறுகிறார்

.

மாகாண சபை தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிடவும், ஸ்ரீ.ல.சு.க.வின் அனைத்து குழுவையும் கூட்டவும், எஸ்.எல்.எஃப்.பி இணைந்த அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடுகளை கூட்டவும், புதிய அதிகாரிகளை நியமிக்கவும் திட்டங்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஸ்ரீ.ல.சு.க தலைவர்களின் பங்களிப்புடன் மாத்தளையில் நடந்த இரண்டு நாள் பட்டறையின் முடிவில், கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சி அங்கத்தவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ளவர்கள் தங்களுடன் உடன்படுகின்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி