1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொரோனா தொற்று காரணமாக ராஜகிரிய கோட்டை வீதி, 353 என்ற முகவரியில் இருக்கும் கலால் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. இங்கு கடமை புரியும் சில அதிகாரிகள் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதனால் கலால் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைக்கமைய அதனை மூடி வைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கலால் திணைக்களம், இராஜகிரியவில் அமைந்துள்ள கலால் திணைக்களத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டமையினால், அந்த நிறுவன ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியிருந்தது.

அதன்படி, இலங்கை கலால் துறையின் கலால் ஆணையர் (சட்ட அமுலாக்க) 1913 தொலைபேசி எண்ணைக் கொண்ட கலால் செயற்பாட்டு அறை, மது, போதை மற்றும் புகையிலை குற்றங்களை மக்களுக்கு தெரிவிக்க 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறியுள்ளது. 2021 ஏப்ரல் 23 வரை இது செயற்பாட்டில் இருக்கும் என கபில குமாரசிங்க அறிவித்துள்ளார்.

இருப்பினும், 071 6345291, 071 3108507, 071 8122333 என்ற தொலைபேசி எண்கள் 2021 ஏப்ரல் 23 வரை திறந்திருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது, இதன்படி கலால் திணைக்களத்தின் சுற்றிவளைப்பு பிரிவு எதிர்வரும் 14 நாட்கள் வரை மூடிவைக்கப்படவுள்ளது. இதன்போது மதுபானம்,போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் 1913 என்று இலக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த தொலைபேசி இலக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் செயற்பாட்டில் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி