1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

Colombo oberoi hotel இல் cleaner ஆக தொழிலை தொடங்கிய N.L.M. முபாறக் சாதிக்கத் துடிக்கும் இளைஞா்களுக்கு ஒரு தெம்பாகவும் சாதித்து இறைவனை மறந்து வாழும் உள்ளங்களைக் குத்தும் ஒரு அம்பாகவும் திகழும் ஒரு முன்மாதிாியான மனிதர்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்லூரிக்கு வரும்போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்தான்குடியில் இருந்து முதன்முறையாக சவூதி அரேபியாவுக்குச் செல்கின்றபோது இவர் வலிமைமிக்க ஓர் இளைஞர். வர்த்தக அறிவும், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் இயல்பும் இவருடன் கூடவே பிறந்த திறன்களாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்சலால்’ முதிர்ச்சியடைந்து சாதித்தவரான N.L.M. முபாறக், ஒரு புதுமையான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்றியது இந்தப் புதுமையான மனிதரிடத்திலிருந்தே. இந்த வடிவமைப்பாளரிடமிருந்தே

இவாிடம் முதலாவதாகச் செய்த தொழில் என்ன என்று கேட்ட போது, பாடசாலையில் இருந்து விலகியவுடனேயே லங்கா ஒபரோய் ஹோட்டலில் House Keeping  பிரிவில் தொழிலொன்றை நானே தேடிக்¬கொண்டேன். நான் அங்கு விறாந்தையை சுத்தப்படுத்தினேன். அறைகளை ஒழுங்குபடுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்தப்படுத்தினேன். பகலிலும் வேலை, இரவிலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்றவரை சிறப்பாக வேலை செய்தேன். அது தொந்-தரவு என்றோ தாழ்வானதென்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. சவூதியில் இருந்த பத்து வருடங்களிலும் அவ்வாறுதான்.

இன்று அந்த கடந்தகாலம் ஞாபகத்திற்கு வருகின்றபோது என்ன நினைக்கின்றீர்கள்

ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்தப்படுத்திய ஒரு சிறிய பையனுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடிய பாரிய கம்பனியொன்றை உருவாக்க முடியுமாயின், இன்றைய சந்ததியினருக்கு எவ்வளவு விடயங்களைச் சாதிக்க முடியும். சரியான பாதையொன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் அர்ப்பணிப்புடன் பயணிப்பதே அவசியமாகும். தாய் தந்தை இல்லையெனில் ஏனைய முதியவர்களாவது அவ்வாறானவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதனையே நான் நினைக்கின்றேன்.

பத்து வருட காலம் நீங்கள் சவூதியில் என்ன செய்தீர்கள் என்று கேட்ட நேரம்,

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

N.L.M. முபாறக் (NOLIMIT முபாறக் ஹாஜியாா்)

அது “camp operation…” நிறுவனமொன்றாகும். நான் சுத்திகரிப்பாளர் ஒருவராகத் தொழிலை ஆரம்பித்தேன். சம்பளம் 950 ரூபா. எழுதுவினைஞர், மேற்பார்வையாளர், முகாமையாளர். என படிப்படியாக முன்னேறி, செயற்றிட்ட முகாமையாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழிநடத்தற் செயற்பாடுகளும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டன. 1500 பணியாட் தொகுதியினரை நிருவ¬கித்தேன். நிருவாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான சிறந்த அனுபவங்களை நான் அந்தத் தொழிலின்போதே பெற்றுக்¬கொண்டேன்.

அத்தகைய சிறந்த தொழிலை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்தீர்கள் எனக் கேட்க, எனக்கே உரிய ஒன்றைச் செய்வதற்கு. சிலவேளை எனக்குள்ளேயே தொந்தரவு தருகின்ற பெஷன் பற்றிய ஆர்வத்தின் தூண்டுதலாகவும் அது இருக்கலாம். நான் இலங்கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பதுளையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்தேன். தந்¬தைக்கு மட்டக்களப்பில் துணிக்கடை ஒன்று இருந்தமையால் எனக்கு இதனைச் செய்வதற்குத் தோன்றியது. எனினும் ஆறு வருடங்களின் பின்னர் நான் அந்த வியாபாரத்தை நிறுத்திவிட்டேன்.

Dehiwala French Corner ஐ தொடங்கியது 10 லட்சம் ரூபா முதலுடன். அப்போது எல்லா item களிலும் கொஞ்சம் கொஞ்சம் தான் இருந்தன. Sales ஐ வைத்து தேவையான அளவு purchase பண்ணிக் கொள்வேன்.

Life இல் சந்தித்த failures பற்றி சொல்லும் போது, பதுளையில் இருந்த போது restaurant ஒன்று நடத்தினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டு அதை மூடிவிட்டேன். அதன் பிறகு Agency ஒன்றை தொடங்கி அதுவும் சாிவரவில்லை. சாிவராது என விளங்கினால் அந்த Business ஐ கை விட்டு விடுவேன். அதனை ஒரு failure ஆக பாாக்க மாட்டேன்.அதிலிருந்து விடுபடுவது அதை விட நிம்மதியாகும்.

Life இல் challenges களை face பண்ண விரும்புகிறீா்களா எனக் கேட்ட நேரம், அனேமானோா் வேண்டாம் என்று கூறிய போதும் கல்கிஸ்ஸ (Mount Lavinia) யில் உள்ள மயானத்திற்(cemetery) கு முன்னால் பொியதொரு Nolomit Glitz Showroom ஐ open பண்ணினேன். Cemetery பாழடைந்தெதென்பதற்காக எனது Business உம் பாழடையும் என்பது அா்த்தமா?. இல்லை, அப்படியான போலி நம்பிக்கைகள் என்னிடமில்லை. முதலாவது நம்பிக்கை இரண்டாவது தைாியம் அத்துடன் அதனை சிறப்பாகவும் கவா்ச்சிகரமாகவும் முன் வைக்க முடியமாயின் Cemetery க்குள்ளே

Showroom ஐ open பண்ணினாலும் customers வருவாா்கள்.

Business க்காக loan எடுப்பீா்களா எனக் கேட்ட போது, loan வாங்கி புதிய Business அல்லது புதிய Showroom களையோ open பண்ணும் பழக்கம் என்னிடமில்லை. கையில் பணம் இருந்தால் மட்டுமே எந்தவொரு Business  யும் start பண்ணுவேன்.

Life இல் சந்தித்த மிகவும் கஷ்டமான நேரம் அல்லது காலம் (difficult times) பற்றி சொல்லும் போது, இறைவன் எமக்கு கஷ்டத்தை தருவது எம்மை சோதித்துப் பாா்ப்பதற்காகவே. நாம் அவற்றுக்கு விரும்பியோ விரும்பாமலோ முகங் கொடுத்தே ஆக வேண்டும். Panadura Showroom எாிந்து சாம்பலாகி 300 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது. நான் கவலைப்படுவதால் என்ன பயன்?. இறைவன் கொடுத்தான் அவனே எடுத்துக் கொண்டான். Problems வந்து விட்டதே என்று கவலைப்படுவதில் பயனில்லை. அதுதான்வாழ்க்கையின் நியதி என்று நினைத்து முன்னோக்கி செல்வதே வெற்றியளிக்கும். எந்தவொரு கஷ்டகாலத்திலும் நடுநிலையாக இருப்பதுதான் முக்கியமும் வெற்றியும் அளிக்கும்.

கடந்த 24 வருட காலத்தினுள் நாம் இந்த நாட்டின் சில்லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை ஏற்ப¬டுத்தியுள்ளோம். சிலவேளை இதனைவிட அதிகமாகவும் இருக்கலாம். பாடசாலையை விட்டுவிலகிய இளைஞர்களை உள்வாங்கி, அவர்¬களுக்குச் சிறந்ததொரு பயிற்சியை வழங்கி, அவர்களின் நடையுடை பாவனை மற்றும் மனப்பாங்கு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி¬யுள்ளோம்.  அவ்வாறு உருவாகியவர்களுள் பலர் இன்று நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்ற விதத்தில் சர்வதேச ரீதியில் பணியாற்றுகின்றனர். NOLIMIT இல் பணியாற்றியதாகச் சொன்னவுடன் அவர்களுக்கு இன்று சர்வதேசத்தில் பாரிய வரவேற்புக் கிடைக்¬கின்றது.

மனிதனின் முன்னேற்றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்ற காரணி,

முதலில் மற்றவர்களை முன்னேற்றுகின்ற முறை பற்றிச் சிந்தியுங்கள். சகல தொழில்வாண்மையாளர்களும் சாதிக்கவில்லை. சாதித்த அனைவரும் தொழில்வாண்மையாளர்களும் அல்லர். சிறந்த குறிக்கோளுடன் வேலைசெய்வதே முக்கியமானதாகும். அந்தக் குறிக்கோ¬ளினுள் மற்றவர்களை முன்னேற்றிவிடுகின்ற செயற்றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதேபோன்று வாழ்க்கைக்கு எவ்வித பெறுமானத்¬தையும் வழங்காத நபர்களிடமிருந்து விலகியிருப்பதும் முக்கியமாகும். சிறந்த மனிதர்களுடன் பழகுவதும், வாழ்க்கையில் நல்ல விடயங்¬களை இணைத்துக் கொள்வதும் முக்கியமானவையாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி