1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (16) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் , ஜனாதிபதியாக தனது கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியாவிட்டால் வீட்டிற்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் ஜனாதிபதி அச்சுறுத்தியதை எதிர்த்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான மேர்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பில், ஜெயரத்னவின் மலர்ச்சாலைக்கு சென்று கல்லறையில் ஒரு இடத்தை முன்பதிவு செய்து விட்டு இறுதிச் சடங்கிற்காக பணத்தையும் செலுத்தி விட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார்.

ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ருஹுனு விஜேதாசாவின் உறவினர்கள் மற்றும் எனது உறவினர்கள் வரலாற்றில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை மேர்வின் சில்வா நினைவு கூர்ந்தார், மேலும் ஜனாதிபதி ஆரம்பத்தை மறந்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்ற ராஜபக்சக்களை அவமதிக்காத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதியை அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஒரு ஹிட்லராக்க சிலர் விரும்புவதாக மேர்வின் சில்வா கூறினார், இறுதியில் ஹிட்லருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தலைவிதியையும் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி