1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நடைமுறையில் உள்ள 25 சதவீத சீனி வரி ஏப்ரல் 13 ம் திகதி முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி, நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, சீனி இறக்குமதி தொடர்பான விசேட பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதமாக குறைத்தார்.

வரி பொதுமக்களுக்கு பயனளிக்கவில்லை என்று எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதன் காரணமாக ஜனவரி 13 முதல் ஏப்ரல் 13 வரை 25 சத வரி விதிக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மீண்டும் 13 ஆம் திகதி சீனி உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி வரியை 25 சதமாக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனிக்கு மேலதிகமாக, 25 சதவீத வரி பெரிய வெங்காயம் மற்றும் பருப்புக்கும் பொருந்தும்.

இதுதொடர்பாக மொத்த வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரால், உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கு முடிவடையும் வரை வரியை மாற்ற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி