1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை விமானப்படையினால் விமான மூலம் உகண்டாவிற்கு அனுப்பட்ட 102 தொன் எடை கொண்ட ‘முத்திரையிடப்பட்ட பொருட்கள்” சம்பந்தமாக சந்தேகம் எழுந்துள்ளது.

உகண்டாவின் ‘என்டபே” விமான நிலையத்திற்கு 2021 பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட ‘எயார் பஸ் யு 333″ விமானங்கள் மூன்றில் இந்த இந்த முத்திரையிடப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டமையானது. இந்நாட்டு விமானங்கள் மூலம் பொருட்கள் அனுப்பும் வரலாற்றில் விசேட சந்தர்ப்பமாகுமென சிறி லங்கன் விமானக் கம்பனியான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருந்தாலும், இந்த விமானப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக, தகவலறியும் உரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 102 தொன் எடை கொண்ட பொதிகளின் உரிமையாளர் யார் என்ற தகவலோ, அவை யாருக்கு அனுப்பப்பட்டது என்ற தகவலையோ, முத்திரையிடப்பட்டிருந்த பொருட்கள் எவை என்பது பற்றிய தகவலையோ வெளியிட மறுக்கப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமையின் கீழ் மேற்படி தகவல்களை அறிந்து கொள்வதற்காக ‘சன்டே டைம்ஸ்” ஊடகவியலாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வின்னப்பத்திற்கு பதிலளித்து சிறிலங்கன் விமானக் கம்பனி, விமானங்களில் அனுப்பப்படும் பொருட்களின் உள்ளடக்கம் சம்பந்தமாக சரியான தகவல்கள் இல்லையெனக் கூறுகிறது. என்றாலும், மேற்படி பொருட்கள் சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனவா என்பது இது வரை தெரியவில்லை.

பெப்ரவரி 24ம் திகதி சிறிலங்கன் விமானச் சேவையின் உத்தியோக ட்விட்டர் கணக்கிலிருந்து தகவலொன்றை வெளியிட்டு, ‘உகண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு மூன்று சரக்கு விமானங்கள் தொடர்ந்து பயணிப்பதுடன், சிறிலங்கன் காகோ இன்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்த போதிலும் பின்னர் அந்தக் குறிப்பும் புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் சம்பந்தமாக யாரையாவது சந்தேகிப்பதாயின், வெளியிடப்பட்ட செய்தியையும் புகைப்படத்தையும் நீக்கியிருப்பது கேள்விக்குரியதாகும் எனவும் பத்திரிகை குறிப்பிடுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி