1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்க நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு 09 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பிற்பாடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அடங்கிய குழு இப் பேருந்து சாலை தொடர்பாக திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 14ம் திகதி போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொக்குகே அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கூடிய விரைவில் சாதகமான முடிவை பொற்றுதருவதாக அன்று வாக்குறுதி அளித்தார் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே. அவரின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் கடந்த 14 ம் திகதி கைவிடப்பட்டது.

அதன் அடுத்தகட்டமாக இன்று (21) அமைச்சரை சந்தித்து பேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தலைமையிலான சமூக செயற்பாட்டாளர்கள் குழுவினர் சம்மாந்துறை பஸ் நிலையம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கு எடுத்துரைத்து உடனடியாக தீர்வை பெற்றுத்தர கோரிக்கை முன்வைத்தனர்.

உடனடியாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் இது தொடர்பில் கலந்துரையாடி ஆலோசனை செய்த அமைச்சர் காமினி லொக்குகே அவர்கள் இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு உடனடியாக இவ்விடயத்தை செய்து முடிக்குமாறும். சம்மாந்துறை டிப்போவை அங்கையே நிரந்தரமான இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்ததாக அமைச்சரை இன்று காலை சந்தித்த பின்னர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி