1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் எனினும் இந்த அரசாங்கமானது எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாங்கள் எந்த தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நினைவு கூறுவோம் என தெரிவித்ததோடு மே மாதம் என்பது ஒரு விசேட மாதமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மேதின நிகழ்வு இடம்பெறும் மாதமாகும்.

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான இறந்த உயிர்களை மக்கள் நினைவு கூறும் நாள், எனினும் இந்த அரசாங்கமானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த இரண்டு தினங்களையும் தடுப்பதற்காகவே இந்த கொரோனா என்ற குழப்பத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதனால் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலே விஷேடமாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் வேறுநாட்டு மக்கள் இல்லை எதிரிநாட்டு பிள்ளைகள் இல்லை அவர்கள் எங்களது சகோதரர்கள் அதனால் அந்தச் சகோதரர்களை நினைவு கூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமை இருக்கின்றது.

அந்த உரிமையை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது அதனால் இதற்கு எங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள எதற்காகப் போராடினார்கள் என்பதல்ல பிரச்சினை அவர்கள் எதற்காக போராடினாலும் அவர்கள் எமதுநாட்டு மக்கள் மக்கள் ஆகவே உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை யாரும் தடுக்க முடியாது எனவே மக்களின் உரிமையை இந்த அரசாங்கம் மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி