1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பெண்களைப் பலியெடுக்கும் நுண் கடனை நிறுத்தக்கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பல இலட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

இக்கையெழுத்து சேகரிக்கும் செயல்முறை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என நுண் கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டார்கள்

இச்செயற்பாடு இம்மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொண்டு வருவதாகவும், இறுதியில் கையெழுத்துக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நுண் கடன்களின் மூலம் நாட்டில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி