1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தடை செய்ய ஜனாதிபதியால்  அமைச்சரவையில் நேற்று (27) சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும். ஆனால் ஏரிகள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதால் உயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை அந்த இலாபத்தால் ஈடுசெய்ய முடியாது. இரசாயன உரங்களின் தாக்கத்தால் சிறுநீரக நோய் உட்பட பல தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கின்றன. சிகிச்சைக்கான செலவு மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் அதிகமாகும். ஆரோக்கியமான உற்பத்தி செய்யும் குடிமகனை ஊக்குவிக்க  நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அதற்காக, நாட்டின் முழு விவசாயமும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படும் ”என ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் இயற்கை உர உற்பத்தியை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் தலையிட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, உர மானியத்திற்கு பதிலாக இயற்றை உரங்களை வழங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

உர இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் 400 மில்லியன் டொலரை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

என்னை ஆட்சியில் அமர்த்திய மக்கள் கொள்கை மூலம் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், நாட்டிற்கான அந்த அபிலாஷைகளை அடைய அனைவரின் ஆதரவும் தேவை என்றும் ஜனாதிபதி கூறினார்.

அவசர அமைச்சரவை பத்திரம்!

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் மேலதிக விவாதங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை மேலும் தாமதப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி அழுத்தமாக கூறியுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஜனாதிபதியின் முடிவைப் பாராட்டியதோடு, நாட்டில் விவசாயத்தை இயற்கை உரங்களுடன் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியளித்தார்.

ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரம் பின்வருமாறு,

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி