1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக இன்று மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய 04 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் நான்கு மாகாணங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் தடைபடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் இன்று முதல் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

புதிய வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுக ஊழியர்கள் இன்று முதல் மெதுவான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக பொது முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமனரத்ன, மெதுவாக வேலை செய்யும் தொழில்சார் நடவடிக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களும் இன்று சில கடமைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று, நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

https://tamilleader.lk/news/7114-2023-03-12-15-38-59

வாகனங்களின் விலை குறையுமா?

விபரம்:  https://tamilleader.lk/news/7114-2023-03-12-15-38-59

Facebook: https://www.facebook.com/profile.php?id=100037509187400

YouTube: https://www.youtube.com/@TheLeaderTV

மேலும் பல செய்திகளை பெற்றுக்கொள்ள எங்களுடைய Whatsapp குழுவில் இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/DDOqYGvOhPq3hX0ZAOU3Ki

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி